மீடூ_வில் சிக்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்..!!

மீடூ விவகாரத்தில் பி.சி.சி.ஐ. தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள ராகுல் ஜோஹ்ரி மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றஞ்சாட்டி உள்ளார்
வேலை பார்க்கும் இடங்களிலும் , பிற இடங்களிலும் ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீப காலமாக பெண்கள் தைரியமாக புகார் கூறி வருகின்றனர். சர்வதேச அளவில் ‘மீடூ’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக இப்படிப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன.
இதில் சினிமாத்துறையில் பணியாற்றும் ஏராளமான பெண்கள் ‘மீ டூ’ என்ற பெயரில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து வருகின்றனர். எனினும் அரசியல் துறையையும் இது விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் துறையிலும் முதல் மீடூ குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய  (பிசிசிஐ) தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரி இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
2016 ஏப்ரல் முதல் பிசிசிஐ. தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் ஜோஹ்ரி  பத்திரிகையாளர் பெயரிடப்பட்ட  ஒருவரால் குற்றம்சாட்டப்பட்டு உள்ளார்.
அடையாளத்தை வெளிபடுத்தாத அந்த  பெண் ஒரு பத்திரிகையாளராக இருந்தார். இருவரும் வெவ்வேறு ஊடக நிறுவனங்களுக்கு வேலை செய்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் குறிபிட்டு உள்ளார்.  ஜோஹ்ரியின்  பாலியல் தவறான நடத்தை பற்றி குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த பதவிக்கு முன் தெற்கு ஆசியா  டிஸ்கவரி நெட்வொர்க்கில்  ஆசியா பசிபிக்கிற்கான செயல்பாட்டு துணை தலைவர் மற்றும் பொது முகாமையாளராக ஜோஹ்ரி பணியாற்றினார்.
இதற்கு முன் விமானப் பணிப்பெண்  ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அர்ஜுன ரணதுங்க மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் மீது பாலியல் குற்றம் சுமத்தினார்…
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment