மியாமி ஓப்பன் டென்னிஸ்:முதல் சுற்றிலே செரீனா வில்லியம்ஸ் தோல்வி….!

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மியாமி ஓப்பன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில்  தோல்வியடைந்து வெளியேறினார். அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் அண்மையில் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்டம் பெற்ற ஜப்பானின் நவோமி ஒசாகா, 23முறை கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை எதிர்த்து விளையாடினர்.

இந்த ஆட்டத்தில் ஆறுக்கு மூன்று, ஆறுக்கு இரண்டு என்கிற நேர் செட்களில் நவோமி ஒசாகா வெற்றிபெற்றார். இந்தத் தோல்வியால் செரீனா வில்லியம்ஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment