மாரடைப்பை தடுக்கும் நெல்லிக்காய்!!

நெல்லிக்காய் குறிபிட்ட காலங்களில் கிடைக்க கூடிய ஒரு சத்துக்கள் நிறைந்த கனி ஆகும். வரலாற்றில் கூட நெல்லிக்காய்க்கு ஒரு சிறப்பு பெயர் உள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த நெல்லிக்காய் தன்னுள் அதிகமான சத்துக்களை கொண்டுள்ளது.Image result for நெல்லிக்காய்
ஒவ்வொரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே,  மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
உடல் எடையை குறைக்க
Image result for உடல் எடையை குறைக்க
தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல்  எடையைக் குறைக்க முடியும்.
கூந்தல் கறுப்பாக
Image result for கூந்தல் கறுப்பாக
நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.
இரத்தத்தின் அளவை அதிகரிக்க
நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும. அழகான சருமத்தையும் பெறமுடியும். முடி  கொட்டும் பிரச்சனையை முடிவு கட்டும். புதிதாக முடிகள் வளரும்.
Image result for ஹீமோகுளோபின்
நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கண் பார்வை கூர்மையாகும்.. மாலைக்கண் வியாதி நீங்கும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment