மலேசிய விமானத்தை தேடும் பணியில் அமெரிக்க கப்பல்!

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி, 239 பயணிகளுடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பிஜிங் சென்ற MH370  விமானம் மாயமானது. விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கக் கூடும் என தேடுதலில் ஈடுபட்ட மலேசியா, சீனா, ஆஸ்திரேலிய கடல் சார் தேடுதல் படை சந்தேகித்திருந்தது. இதனிடையே ரீயூனியன் தீவுக்கு அருகே கடந்த ஆண்டு விமானத்தின் இறக்கையின் பாகம் கண்டெடுக்க பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் தேடுதலை மீண்டும் முன்னெடுத்த நிபுணர்கள் அப்போது  கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் வடக்குப் பகுதியில் விழுந்திருக்கக் கூடும் எனக் கணித்திருந்தனர்.
Image result for malaysia MH370 flight missing
இந்நிலையில்  காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடுவதற்காக வரவழைக்கப்பட்ட அமெரிக்கக் கப்பல், இந்தியப் பெருங்கடலில் விமானம் விழுந்ததாக கருதப்படும் பகுதியைச் சென்றடைந்தது.
மேலும்  இந்திய பெருங்கடலின் தீவுகளிலும், ஆப்பிரிக்காவின் கிழக்கு கடலோரப்பகுதியிலும் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானத்தின் எஞ்சிய பகுதியைக் கண்டுபிடிக்க, சீ பெட் கன்ஸ்ட்ரக்டர்  என்ற அமெரிக்க கப்பலை வாடகைக்கு அமர்த்திய மலேசிய அரசு, 90 நாட்களில் கண்டு பிடித்தால் 446 கோடி ரூபாயை கட்டணமாக வழங்கவும் சம்மதம் தெரிவித்தது. தென்னாப்பிரிக்காவின் டர்பன் பகுதியில் கடந்த 3 ஆம் தேதி தேடுதல் பணியைத் தொடங்கிய அமெரிக்க கப்பல், தற்போது விமானம் மூழ்கியதாக கருதப்படும் பகுதியைச் சென்றடைந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Leave a Comment