பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி (Pedro Pablo Kuczynski) ராஜினாமா!

பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி (Pedro Pablo Kuczynski) வாக்களிக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில்  பதவி விலகினார். குசின்ஸ்கி அமைச்சராக இருந்தபோது அவரது நிறுவனத்திற்கு முறைகேடாக பணிஒப்பந்தம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அவர்மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருந்தன. இந்நிலையில், அதிபருக்கு சாதகமாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.யிடம் பேரம் பேசுவதாக ஆளும் கட்சியினர் வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக குசின்ஸ்கி அறிவித்துள்ளார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கவில்லை எனவும் பதவி விலகிய குசின்ஸ்கி கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment