“பிரதமரை கொல்ல குண்டு தயாரித்தவர்” இலங்கை கட்டுப்பாட்டில் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி..!!

Image result for பன்வாரிலால் புரோஹித்

ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானம் தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறும் போது ,

ராஜீவ் காந்தி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்தவர் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளார் என்றும், அவர் இதுவரை விசாரிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குற்றம்சாட்டினார்.உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படாமலேயே வழக்கு தொடர்வதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மேலும் தெரிவித்துள்ளார்.

Image result for பேரறிவாளனின்

தொடர்ந்து பேசிய அவர்,“எனது மகன் பயன்படுத்திய மின்கலம், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
அது மட்டுமில்லாமல் வெடிகுண்டை தயாரித்தவர் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளார் என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியும். ஆனால் இதுவரை அவரிடம் எந்த வித விசாரணையும் நடத்தவே இல்லை என்றார்.

Image result for பேரறிவாளனின்

நிரூபிக்கப்படாத குற்றத்துக்காக எனது மகன் 28 வருடங்களாக சிறைவாசத்தை அனுபவித்துவிட்டான்.இந்த நிரூபிக்கபடாத இந்த குற்றச்சாட்டால் முதலில் பாதிக்கப்பட்டது நானும் எனது மகனும்தான்.எனவே ஆதாரம் நிரூபிக்காமல் தண்டனையை அனுபவிக்கும் என் மகன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுவிக்க ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment