பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி..!!நேபாளத்திற்கு பயணம்..!!

தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேபாளம் புறப்பட்டுச் சென்றார்.
வங்கக் கடலை சுற்றி அமைந்துள்ள நாடுகளின் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புக்காக இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய 6 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் இன்றும், நாளையும் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் புறப்பட்டுச் சென்றார்.உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment