நேரடியாக மோதும் தனுஷ்..சிவகார்த்திகேயன்…!! அடுத்த அதிரடி ரெடி..!!

நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி 2 படம் உருவாகி உள்ளது. படத்தை பாலாஜி மோகன் இயக்குகிறார் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் நடிகை வரலட்சுமி நடித்துள்ளனர்.படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.மேலும் படத்தின் முதல் பாடலை வெளியிட்டது. டிசம்பர் 21-ம் தேதி படம் திரைக்கு வருகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அதேநாளில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பில் வெளிவர இருக்கும் படம் கனா இந்த படம் முழுக்க முழுக்க மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது.சிவாவின் கனா படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் நண்பரும் பாடகரும் ,பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜா முதல் முறையாக இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய காதபாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் டிசம்பர் 21-ம் தேதி இந்த இரு படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து சீதக்காதி படத்தின் டீசர்,ட்ரைலர் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

 

author avatar
kavitha

Leave a Comment