நீர் பாசன திட்டத்தை நிறைவேற்ற கோடிக்களை கொடுத்து உதவிய சீரடி சாய்பாபா..!!

கோதாவரி நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற மகாராஷ்ரா அரசுக்கு ரூ.500 கோடியை  வழங்க சீரடி சாய்பாபா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
மகாராஷ்ராவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக குறைந்த அளவிலே மழைபெய்துள்ளது.இதனை அடுத்து அந்த பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. மேலும்  5 கிலோமீட்டர் வரை மக்கள் தண்ணீருக்காக  நடந்து செல்வதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் மகாராஷ்ரா மாநிலத்தில் மரத்வாடா பகுதி மிகவும் வறட்சியானப் பகுதி இங்கு தான்  இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவான மழை  பெய்து உள்ளது.
Related image
மேலும் மாநிலத்தில் பல பகுதிகளில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில் கோதாவரி ஆற்றில் இருந்து மரத்வாடா பகுதிக்கு இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை மகாராஷ்ரா மாநில அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில் விரைவாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவிய நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற நிதிபற்றாக்குறை ஏற்பட்டு திட்டத்தை அரசு கிடப்பில் போட்டு விட்டது. இதனிடையே ஏற்கனவே சாய்பாபா கோவிலில் வரும் நிதியில் இருந்து ரூ.500 கோடி கடனாக  வாங்குவதற்குஅம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் ஒரு  கூட்டம் நடைபெற்று ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
Image result for கோதாவரி
இந்நிலையில் கோதாவரி நீர்ப்பாசன திட்டத்தை விரைவில் செயல்படுத்த ரூ.500 கோடி நிதியை சாய்பாபா கோவில் வட்டியில்லாமல் வெறும் கடனாக வழங்குகிறது. திட்டத்தை செயல்படுத்திய பின் மாநில அரசு இதனை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி செலுத்தலாம் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாய்பாபா கோவிலின்  வரலாற்றிலேயே  அரசின் ஒரு திட்டத்திற்கு கோவில் கடன் வழங்குவது இதுவே முதன்முறை. மேலும் சாய்பாபா அறக்கட்டளை இதற்கு முன்னரும் மகாராஷ்ரா மாநிலத்தில் 4 அரசு மருத்துவ கல்லூரிகளின் மேம்பாட்டுக்காக  ரூ.71 கோடி நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment