” நாகையில் ஓட்டம் பிடித்த அமைச்சர்கள் ” மீனவர்கள் செய்த அட்டகாசம்..!!

நாகை:

தங்கமீன் விடும் விழாவை முன்னிட்டு அமைச்சர் ஜெயக்குமாரை கடலுக்கு தூக்கிச்சென்று மீனவர்கள் ஆரவாரம் செய்தனர்.
நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபக்த நாயன்மார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவரை சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் முதல் மீனை சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம்.
இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் இவரது கையில் தங்க மீன் ஒன்றை கிடைக்கும்படி செய்தார்.அதிபக்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.தங்கமீன் விடும் விழா அதிபக்தநாயனாரின் தெய்வ பக்தியை மெச்சிக்கும் வகையில் தங்கமீன் விடும் விழா ஆண்டுதோறும் நம்பியார்நகரில் நடைபெறும்.

Image result for நாகை மீனவர்கள் தங்க மீன்

அதே போல் நேற்று நடைபெற்ற இவ்விழாவில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், கைத்தறித் துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தங்கமீன் ஊர்வலம்விழாவை முன்னிட்டு நீலயதாட்சியம்மன் ஆலயத்திலிருந்து பூஜிக்கப்பட்ட தங்கமீன் மற்றும் அதிபக்த நாயனாரின் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது சிவனடியார்கள் பம்பை மேளம் முழங்க பத்தி பரவசத்துடன் தாண்டவ நடனமாடினர்.

மீனை கடலில் விட்ட அமைச்சர்அதனை தொடர்ந்து தங்கமீனுடன் படகில் நடுகடலுக்கு சென்ற தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை விட்டு எடுத்தார்.தூக்கிச்சென்ற மீனவர்கள் தங்க மீன் விடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை மீனவர்கள் குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கி சென்று ஆரவாரம் செய்தனர்.பயந்து ஓடிய அமைச்சர்இதனிடையே கடலில் தங்க மீன் நிகழ்ச்சிக்காக படகில் ஏறிய கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அலையின் சீற்றத்தை கண்டு அஞ்சி அவர் திடீர் என ஒரு கட்டத்தில் படகில் இருந்து சர சரவென இறங்கி கரைக்கு ஓடி வந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment