தெலுங்கானா முதல்வரின் பயண செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டதற்கு தகவல் தர முதல்வர் மறுப்பு ..!

தெலுங்கானா முதல்வரின் பயண செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டதற்கு தகவல் தர முதல்வர் அலுவலகம் மறுத்துள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், 2019-ம் ஆண்டுலோக்சபா தேர்தலை எதிர்நோக்கி மூன்றாவது அணிக்கு முயற்சித்து, மேற்குவங்கம் சென்று முதல்வர் மம்தாபானர்ஜி, தமிழகம் வந்து தி..மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின், கர்நாடகா சென்று தேவகவுடா, உ.பி. சென்று அகிலேஷ் உள்ளிட்டதலைவர்களை சந்தித்து பேசினார்

இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த அம்ஜத் உல்லாகான், முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த 2 மாதங்களில் பல்வேறு மாநிலங்களுக்கு விமானம் மூலம் சந்திரசேகரராவ் மேற்கொண்ட பயணச் செலவு மக்களின் வரி பணத்திலா அல்லது சொந்த செலவிலா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முதல்வர் அலுவலகத்திற்கு மனு செய்து மாநிலம் வாரியாக செலவு கணக்குகளை பார்வையிட்டு நகல் கேட்டிருந்தார்..

மனுவை பரிசீலித்த முதல்வர் அலுவலக பொதுத்தகவல் அலுவலர், தங்களின் மனு தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 2(F)ன் கீழ் வராது என்பதால் தகவல் தர இயலாது என மனுவை தள்ளுபடி செய்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment