திறக்கப்படும் ஸ்டெர்லைட்….ஏமாற்றிய அகர்வால் அறிக்கை….அதிர்ச்சியில் மக்கள்…!!

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என்று  தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசனை வெளியிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஐவர் குழுவை அமைத்து, 6 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் ஆய்வு செய்தனர். அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 30-ம் தேதி முடிவடைந்தநிலையில், வல்லுநர் குழு சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதனை ஏற்ற பசுமைத் தீர்ப்பாயம், நவம்பர் 30-ம்  தேதி ஆய்வறிக்கையை சமர்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.இதையடுத்து, சீலிடப்பட்ட 42 கவர்களில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கையை ஐவர் குழுவினர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.

இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணை   தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடங்கியது. தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.இதில் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது.ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது.ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பாமல் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு.ஸ்டெர்லைட் ஆலையை முடியதற்கு தமிழக அரசு கூறிய காரணம் ஏற்புடையதல்ல என்று தருண் அகர்வால் விசாரணை ஆணையம் தெரிவித்தது.தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பில் ஸ்டெர்லைட் வழக்கை அடிக்கடி ஒத்திவைக்க கூடாது என்று வாதாடப்பட்டது.இந்த விசாரணை அறிக்கை தொடர்பான ஆய்வறிக்கைக்கு தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இந்த வழக்கை டிசம்பர் 7ஆம் தேதி ஒத்தி வைத்தது பசுமைத்தீர்ப்பாயம்.

dinasuvadu.com 

Recent Posts

பிரதமர் மோடி பற்றி அவதூறு.. 100 கோடி ரூபாய் பேரம்.! டி.கே.சிவகுமார் மீது பரபரப்பு குற்றசாட்டு.!

சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…

32 mins ago

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…

41 mins ago

ஒழுங்கா நடிக்கலைனா அடிப்பாரு! மம்முட்டி குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்?

சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…

2 hours ago

ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!

Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…

2 hours ago

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

4 hours ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

11 hours ago