மனதால் மறக்க முடியாத தூத்துக்குடி துப்பாக்கி சூடு..!!பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு..!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட தூப்பாக்கி சூட்டால் 13 உயிர்களை இரக்கமற்ற முறையில் காவு வாங்கியது. ஸ்டெர்லைட் எதிராக போராட்டம் தூத்துக்குடியில் வெடிக்க அது போராட்டமாக மாறி மக்கள் கொதித்து எழுந்தனர்.இதனால் அவர்களை அடக்க கண்மூடித்தனமாக போலீசாரால் தூப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இந்த தூப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி உயிர்கள் பறிபோனது. இந்நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இணைய சேவையும் அரசால் முடக்கப்பட்டது.ஆட்சியர் மாற்றப்பட்டு புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டார்.இன்றும் மக்களால் … Read more

"ஸ்டெர்லைட் அறிக்கையை ஏற்கக்கூடாது" தமிழக அரசு மனு தாக்கல்…!!

தேசிய பசுமை தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வால் குழுவின் ஸ்டெர்லைட்  அறிக்கையை ஏற்கக்கூடாது என த்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமத்தினர் செய்த மேல்முறையீட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழுவை நியமித்தது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அந்தக் குழுவினர், முன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது தவறு என்று அறிக்கை … Read more

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ்…!!

மாசு ஏற்படுத்தும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3.5 லட்சம் டன் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் உப்பாறு மற்றும் தனியார் பட்டா நிலத்தில் கொட்டியதாக புகார் எழுந்துள்ளது. எனவே, வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லையை சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மாசு ஏற்படுத்தும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை … Read more

மீண்டும் தொடங்கியது ஸ்டெர்லைட் போராட்டம்… SFI ,DYFI ,AIDWA ,CITU மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா நிறுவனத்தில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிறுவனத்தால் அங்கே இருக்கும் மக்களின் சுற்றுசூழலை பாதிக்கும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் 100_வது நாளில் வன்முறையாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் தொடர்பாக விசாரணை நடத்தி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கோரி முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூன்று பேர் குழுவை நியமித்து … Read more

திறக்கப்படும் ஸ்டெர்லைட்….ஏமாற்றிய அகர்வால் அறிக்கை….அதிர்ச்சியில் மக்கள்…!!

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என்று  தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசனை வெளியிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா … Read more

ஸ்டெர்லைட் தொடங்க யார் காரணம் நாங்கள் தயார் முதல்வர் தயாரா? ஸ்டாலின் கேள்வி..!

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க நானும், திமுக எம்எல்ஏக்களும் தயாராக உள்ளோம். முதல்வர் தயாராக உள்ளாரா என்பதை தெரிவிக்கட்டும்” என கூறியுள்ளார். மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால், சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக பங்கேற்க தயார்” … Read more

ஸ்டெர்லைட் ஆலை மூடல் உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது ரஜினி உருக்கம் ..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டதையடுத்து , அம்மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர். இந்தநிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம்.  அப்பாவி மக்களின் உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று கூறியுள்ளார்.

போருக்கா போனோம்; பொதுக் காரியத்துக்குத் தான போனோம்…!

துப்பாக்கி குண்டுகளுக்கு உறவுகளை பரிகொடுத்து கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் கூற நம்மிடம் வார்த்தையில்லை; சொல்வதற்கு திராணியுமில்லை. பதினேழு வயதுச் சிறுமி ஸ்னோலின் குடும்பம் சிதைந்து கிடக்கிறது. அவரது அம்மா வனிதா தான் இவ்வாறு கேட்கிறார்: “போருக்கா போனோம்; பொதுக் காரியத்துக்குத் தான போனோம்…. அரசாங்கத்த எதிர்த்தா நாங்க போராடினோம், இல்லையே! ஒரு தனியார் முதலாளிக்காக இத்தனை பேர சுட்டுக் கொல்லனுமா?” இல்லை தாயே….முதலாளிகளுக்காகத் தான் இந்த அரசாங்கம் நடக்கிறது அல்லது அரசாங்கத்தையே அந்த முதலாளிகள் தான் நடத்துகிறார்கள் … Read more

தூத்துக்குடியில் காவல்துறை அராஜகம்..!காயமடைந்தவர்கள் வேதனை குரல் ..!

தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய நரவேட்டையில் 65 பேர் காயமடைந்துள்ளனர் . அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச்செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் . அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர் . மருத்துவமனையில் காயமடைந்தவர்களை பார்க்க அவர்களது பெற்றோரும் உறவினர்களும் வந்திருந்தனர் . காயமடைந்தவர்கள் காவல்துறையினர் … Read more

ஸ்டெர்லைட் விவகாரம் : தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட 15 கிராம மக்கள் பேரணி !!

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினா். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவா்கள் வழியுறுத்தி போராடி வருகின்றனா். இந்த பேரணியில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று இணைந்து  சென்று மாசு கட்டுப்பட்டு மையத்தை முற்றுகையிட  போவதாக முடிவு செய்துள்ளனா். இந்த போராட்டத்தில் ஏராளமான போராட்டகாரா்கள் கருப்பு சட்டைகள் அணிந்து கொண்டு மாசு கட்டுப்பட்டு மையத்தை நோக்கி பேரணியாக சென்றனா்.