திருமணம் வேண்டாம்..நடிகர் சங்கம் தான் முக்கியம் …!!

விஷால் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதை, காரணமாகப் பயன்படுத்தி திருமணத்தைக் காலம் தாழ்த்துகிறார் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
சண்டக்கோழி 2 திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது இந்நிலையில் ஒரு இணையதள ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ள வரலட்சுமியிடம், விஷாலுக்கு எப்போது திருமணம்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள அவர், தெரியவில்லை. இதே கேள்வியைத் தான் நானும் அவரிடம் கேட்டு வருகிறேன். இப்படி காலத்தைத் தாழ்த்தினால் பிறகு யாரும் பெண் தர முன்வர மாட்டார்கள் என்பதையும் கூறி வருகிறேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதை, காரணமாகப் பயன்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment