திருப்பதி தேவஸ்தானத்தில் வேறு மதத்தை சேர்ந்த ஊழியர்கள் பணி மாற்றம்

 
 
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் கவனித்து வருகிறது. தேவஸ்தானத்தின் பல்வேறு பிரிவுகளில், ஹிந்து அல்லாத பிற மதத்தை சேர்ந்த பலர், பணியாற்றுவதாகவும், அவர்கள், மத மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. திருமலை கோவில் விதிமுறைகளின்படி, ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, கோவிலில் பணியாற்ற முடியும். ஆனால், அந்த கோவிலில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், தன் அதிகாரப்பூர்வ காரில், தினமும், திருப்பதியில் உள்ள சர்ச்சுக்கு சென்று வருகிறார் என்ற தகவல் ஓர் தனியார் நிறுவன ‘சேனலின்’ ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, திருமலை தேவஸ்தானத்தில் பணியாற்றும், ஹிந்து அல்லாத பிற மதத்தை சேர்ந்த, 44 பேர் விரைவில், ஆந்திர அரசின் வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக, தேவஸ்தான நிர்வாகி, அனில் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்?.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment