தல 59! பட ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது.
இதனை தொடர்ந்து அஜித் , தீரன் பட இயக்குனர் H.வினோத் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் .
தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த வருட மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளன்று ரிலீஸாக உள்ளதாம். அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment