தயிர் சாதம் சாப்பிட்டு இருப்பிங்க…! ஆனா தயிர் இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா…?

இட்லி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகை தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த உணவு பிடிக்கும். இது மென்மையாக இருப்பதால் சிறு குழந்தைகள் கூட இதனை திரும்பி உண்கின்றனர். இப்பொது நாமத்தயிர் இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  • இட்லிகள் – 15
  • தேங்காய் – 2 கப்
  • பச்சைமிளகாய் – 4
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • தயிர் – 2 டம்ளர்
  • இஞ்சி – 1 துண்டு
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

தயிர் இட்லி செய்வதற்கு முதலில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், தயிர், இஞ்சி, உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை நன்கு மீக்சியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக்கி, அரைத்து வைத்துள்ள கலவையில் போட்டு ஊற விட்டு, அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி விட வேண்டும். இப்பொது நமக்கு தேவையான சுவையான தயிர் இட்லி ரெடி.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment