தகுதி நீக்க வழக்கை தொகுதி மக்களின் நலன் கருதி விரைந்து வேண்டும்-சரத்குமார் வேண்டுகோள்..!

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கை தொகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளித்தனர்.

காலையில் 6 வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகு 7வது வழக்காக தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறும் போது 18 MLA க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவித்தார்.

பின்னர் நீதிபதி சுந்தர் அறிவிக்கும் போது 18 MLA க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று அறிவித்தார்.

மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறும் போது இதற்கான இடைதேர்தல் நடத்தக்கூடாது என்ற இடைக்காலத்தடை தொடரும் மேலும் இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் எனவும் கூறினார்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கை தொகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment