டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் – கென்ட் அணியை வீழ்த்தி லங்காஷைர் அரையிறுதிக்கு முன்னேறியது …!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட காலிறுதி ஆட்டத்தில் கென்ட் அணியை வீழ்த்தியது லங்காஷைர் .
இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிந்து தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. முதல் காலிறுதி ஆட்டத்தில் கென்ட்-லங்காஷைர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கென்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த ஆனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆனா சாம் பில்லிங்ஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 134 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் லங்காஷைர் அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீரர்களான டேவிஸ் (15), பட்லர் (0), லில்லி (9) சொற் ரங்களில் ஆட்டமிழந்தாலும், ஜென்னிங்ஸ் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் சேர்த்தார்.
அதன் பின்வந்த கேப்டன் விலாஸ், கிளார்க் ஆகியோர் அவுட்டாகாமல் முறையை 30, 29 ரன்கள் அடிக்க லங்காஷைர் 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment