ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணிக்கு வெள்ளிப் பதக்கம் :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி, இறுதிப்போட்டியில் ஈரானிடம் தோல்வி அடைந்ததால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அரையிறுதியில் சீன தைபே அணியை 27-14 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொண்டது.

மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 24-27 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment