ஜூன் 14 இல் தொடங்கும் டெஸ்ட்டில் சாஹாவுக்கு பதில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் சேர்ப்பு!பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தினேஷ் கார்த்திக் இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சஹாவிற்கு பதிலாக  சேர்க்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. இதையடுத்து,ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடவுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போட்டி,வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இப்போட்டியில் விளையாடும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால்  சஹா விலகியுள்ளார்.  இந்நிலையில் சஹாவிற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment