சூப்பர் ஸ்டார் பிறந்தநாளிற்கு புதிய போட்டோவை அறிமுகப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ்!!

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள். அதற்க்கு ரஜினி ரசிகர்கள் தற்போதே கொண்டாட தயாராகி வருகின்றனர். பல திரையரங்குகளில் இன்று இரவு ஸ்பெஷல் ஷோக்கள் திரையிடபட உள்ளன. இந்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். இந்தாண்டு ரஜினிக்கு காலா, 2.O என இரண்டு படங்கள் வெளியாகின. இதில் ஷங்கரின் 2.O பிரமாண்ட வசூல் சாதனை படைத்தது வருகிறது.

மேலும் அடுத்த வருட பொங்கலுக்கு பேட்ட படமும் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இவர் ரஜினிகாந்த பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த டிபி தற்போது ரசிகர்களிடையே வேகமாக படரவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment