சிவ கார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் திரைவிமர்சனம்…!

சென்னையில் உள்ள கொலைக்கார குப்பத்தில் வாழ்பவர் சிவகார்த்திகேயன். அந்த இடத்தில் எல்லோரும் பிரகாஷ் ராஜின் கண்ட்ரோலில் அடிதடி என வேலைப்பார்த்து வர, இது சிவகார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சமூதாயத்தை மாற்ற ஓர் ரேடியோ ஐடியா மூலம் சில வேலைகளை ஷிவா செய்கிறார். ஆனால் அது ப்ரகாஷ்ராஜிற்கு கோவத்தை அளிக்கிறது என்பதால் அதனை விட்டுவிட்டு ஒரு சேல்ஸ் மேன் பணிக்கு செல்கிறார். அங்கு சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு பஹத் பாசில் பல விதங்களில் உதவுகின்றார். ஹார்ட்வர்க் தேவையில்லை, ஸ்மார்ட் வர்க் தான் முக்கியம் என்று சிவகார்த்திகேயன் புரிந்து வேலை செய்ய, ஒரு கட்டத்தில் தன்னால் இந்த சமுதாயம் எத்தனை பெரிய பிரச்சனையை சந்திக்கவிருக்கின்றது என்பதை உணர்கின்றார். அதை தொடர்ந்து ஒரு வேலைக்காரன் ‘குட் வர்க்’ செய்தாலே போதும் என்று பல முதலாளிகளுக்கு புரிய வைப்பதே இப்படத்தின் கதை. படத்தின் கதைக்களம் மற்றும் வசனங்கள் படத்திற்கு மிக பெரிய ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. அனிருத்தின் இசை எதிர்பார்த்த அளவிற்கு மனதில் இடம்பிடிக்கவில்லை. நயன்தாரா உள்பட படத்தில் நிறைய முன்னணி நட்சத்திரங்கள் இருந்தும், அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. திரைக்கதை சற்று விறுவிறுப்பினை குறைய காரணமாய் உள்ளது. மொத்தத்தில் ‘வேலைக்காரன்’ சிவகார்த்திகேயனின் மற்றுமொரு பரிமாணத்தில் எடுக்கப்பட்ட குடும்ப படம்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment