சவுதியில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்படும் திரையரங்குகள்..!

35 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சவுதியில், வரும் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.

இதன் தொடக்கமாக ரியாத் நகரில் 600 சொகுசு இருக்கைகளைக் கொண்ட (AMC Theater) ஏஎம்சி திரையரங்கம் வரும் 18 ஆம் தேதி திறக்கப்பட்டு, அங்கு பிளாக் பாந்தர் (Black Panther) என்ற ஆங்கிலத் திரைப்படம் திரையிடப்படுகிறது.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள்  கூடுதலாக 40 திரையரங்குகள் கட்டபப்படும் எனவும், 2030 ஆம் ஆண்டுக்குள் திரையரங்குகளின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க சவுதி அரசு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இளவரசர் முகமது பின் சல்மான் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாகவே திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment