சக்கபோடு போடும் சர்கார்…..சர்காரை காணச் சென்ற நடிகர் விஜயின் மனைவி சங்கீதா……!!வீடியோ உள்ளே..!!

நடிகர் விஜய் -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3- வது முறையாக உருவாகியுள்ள படம் தான் ‘சர்கார்’. நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படம் முழுக்க அரசியல் படமாக உருவாகியுள்ளது.

Image result for sarkar

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான நாள் தொடங்கிய முதல் ஒவ்வொரு நாளும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகிறியிருந்த நிலையில் நேற்று தீபாவளியன்று வெளியானது.வெளியான முதலே ரசிகர்களின் அமோக ஆதரவை  பெற்றுள்ளது.மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்த ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மேள தாளங்கள் தெறிக்கவிட்டு,பட்டாசுக்களை வெடித்து  சர்கார் தீபாவளியை விஜய் ரசிகர்கள் வரவேற்றனர்.

Image result for sarkar

ரசிகர் ஒருபக்கம் தங்கள் தளபதியை கொண்டாடிவரும் நிலையில் மறுபுறம்  நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சென்னை குரோம்பேட்டை உள்ள வெற்றி திரையரங்கில் ‘சர்கார்’ படத்தை கண்டுகளித்துள்ளார். இந்த படத்தை அவருடன் இயக்குநர் அட்லி மற்றும் அவரது குடும்பத்தினரும் படத்தைக் காண வந்திருந்தனர். மேலும் அவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் படத்தை தன் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தனர்.

Related image

அவர்கள் திரையரங்கிற்கு வந்த  இச்செய்தியை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கௌதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

Image result for sarkar

இது ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணிக்கு கிடைத்த  ஹாட்ரிக் வெற்றி என்று  படத்தைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.மேலும் படம் ஒவ்வொருவரும் தனது வாக்கு எவ்வளவு முக்கியம் வாக்கு செலுத்த வேண்டிய அவசியத்தை உறுதியோடு  பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment