குதிரைக்கும் கழுதைக்கும் சிறை தண்டனை வழங்கிய உ.பி போலிஸ்

உத்தர பிரதேச மாநிலத்தில் குதிரைக்கும், கழுதைக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதன் விவரம் பின்வருமாறு அந்த மாநிலத்தில் உள்ள உரய் மாவட்டத்தின் ஜாலோன் நகரில் இருக்கும் மாவட்டச் சிறை வளாகத்தை அழகு படுத்தும் நோக்கில் அங்கு பல வகையான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

இதனை 3 நாள்களுக்கு முன், 2 குதிரைகளும், 2 கழுதைகளும்  வளாகத்தில் நுழைந்து இங்குள்ள மரக் கன்றுகளைக் கடித்து தின்றுவிட்டன. அதனால் கோபமடைந்த அந்த சிறை நிர்வாகிகள் 4 விலங்குகளையும் சுற்றி வளைத்துப் பிடித்து சிறையில் அடைத்தனர். இவை 4 நாள் சிறைத் தண்டனைக்குப் பிறகு, அந்த குதிரையும், கழுதையும் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளது. மேலும், விலங்குகள் கடித்து சேதப்படுத்திய செடிகள் ரூ.5 லட்சம் செலவில் அண்மையில் வாங்கி நடப்பட்டது என  சிறை கண்காணிப்பாளர் ஜலோன் தெரிவித்துள்ளார்.

இந்த கைது சம்பவம் பற்றி விலங்குகளின் உரிமையாளர் அணுகியபோது அவர் கூறியதாவது, “ இரண்டு நாள்களுக்கு முன், என்னுடைய குதிரைகளும், கழுதைகளும் காணாமல் போய்விட்டன. அவற்றை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, உள்ளூர் பாஜக பிரமுகர்களின் உதவியுடன், சிறையில் இருந்த எனது கழுதைகளையும், குதிரைகளையும் மீட்டேன்” என அவர் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment