கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளுக்கு மழையாய் கொட்டும் கருப்பு பணம்..!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை கணக்கில் வராத 152 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் இது இரண்டாம் இடம் பிடித்த மிகப்பெரிய பறிமுதலாகும். கடந்த 2017ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது சுமார் 193 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகாரிகள் 131 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றினர். இந்த தொகையை மிஞ்சும் அளவுக்கு இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் கடந்த சில நாட்களில் 152 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கமும் தங்கமும் சிக்கியுள்ளது. தேர்தலில் வெற்றி பெறும் இலக்குடன் அரசியல் கட்சிகள் பணத்தை வாரியிறைப்பதால் மேலும் பல கோடி ரூபாய் சிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment