கர்நாடகவில் இலாகா ஒதுக்கீடு..!மஜத-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இழுபறி..!!

கர்நாடகாவில் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி நீடிக்கும் நிலையில், சுயமரியாதையை விட்டு பதவியில் நீடிக்கப் போவதில்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் துணை முதலமைச்சர் உள்பட 22 அமைச்சர் பதவியிடங்களை அளிக்க குமாரசாமி முன்வந்தபோதும், எந்தெந்தத் துறைகளை யாருக்கு ஒதுக்குவது என்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதாக ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக சோனியா மற்றும் ராகுலை சந்திக்கப் போவதில்லை தெரிவித்த அவர், தமது அரசுக்கு எந்த நெருக்கடியும் என்றும் கூறினார். பிரச்சனையைத் தீர்க்க தாம் முயன்று வருவதாகவும், அதே நேரத்தில் சுய மரியாதையை விட்டுக்கொடுத்து விட்டு பதவியில் நீடிக்க முடியாது என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

முன்னதாக, குமாரசாமியை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, மாநிலச் செயலாளர் வேணுகோபால் ஆகியோர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றனர். நேற்று மாலை ராகுல்காந்தியை சந்தித்து இலாகா ஒதுக்கீடு குறித்து விவாதித்தபோதும், முடிவு எதுவும் எடுக்கப்படாததால் அவருடன் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதனிடையே, பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்திக்க குமாரசாமி நேரம் கோரியதை அடுத்து, நாளை காலை 11.30 மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment