கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவிப்பு..!!

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் நியுதவியை அறிவித்தார் முதல்வர் .

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார் மேலும் கொடூர கஜா புயலால் தற்போது வரை தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.மேலும் இந்த கஜா புயலால் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் 6 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் மக்கள் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும்  மக்கள் அச்சப்படத் தேவையில்லை புயலால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன்  என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கஜா புயலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்  தஞ்சை மாவட்டத்தில் – 4 பேரும், கடலூர் – 3 பேரும், புதுக்கோட்டையில் பேரும் – 2, திருவாரூர் – 2 பேரும், திருச்சி – ஒருவரும் மொத்தம் 12 பேர் கஜாவால் உயிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment