ஓகி புயலால் கடலில் தத்தளித்த 24 மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கடுமையான மழை மற்றும் காற்று காரணமாக இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்த தேசிய தொலைதொடர்பு அமைச்சர் ஜெனரல் சஞ்சய் குமார் அவர்களை தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழு (என்.டி.ஆர்.எப்) குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டு, இன்னும் பல அணிகள் தற்காலிகமாக கைவசம் வைக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடலோர தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் காற்று காரணமாக இதுவரை குறைந்தபட்சம் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்திய கடற்படை இரண்டு மாநிலங்களில் கடலில் சிக்கியுள்ள மீனவர்களுக்கு தேடுதல் மற்றும் மீட்பு முயற்சியை தீவிரமாக  மேற்கொண்டுள்ளது.தற்போதுவரை சுமார் 24 மீனவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் 15 பேர் கடலில் காணப்பட்டார்கள். கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியோரால் கடும் மழையால் பதிக்கப்பட்ட 59 பேர் மீட்கபட்டு திருவனந்தபுரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறது கடற்படை.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 7 மாவட்ட  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாடு, தென் கேரளா, லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய சில இடங்களில் கடுமையான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அதனை தொடர்ந்து தெற்கு தமிழ்நாட்டில் 65-75 கி.மீ., மற்றும் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் 50-60 கி.மீ பலத்த புயல்காற்று வீசும் என வானிலையாளர்கள் கூறுகின்றனர்.

 

இந்திய கடற்படையால் மீனவர் மீட்கப்படும் காட்சி கிழே உங்களுக்காக…

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment