எல்லா பெண்களும் அழகுதாங்க…! தேவதையை கண்டேன்….!!!

வேந்தர் தொலைக்காட்சியில் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தேவதையை கண்டேன். புதிய கான்சேப்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சாதாரண அழகுடைய அல்லது அழகாகவே இல்லை என்று கருதப்படுகிற ஒரு பெண்ணை 30 நிமிடத்தில் தேவதை மாதிரி அழகாக்கி காட்டுவது தான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். இதனை முன்னணி ஒப்பனை கலைஞர்கள் கலந்து கொண்டு நடத்துகிறார்கள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு அழகு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதை எப்படி வெளிக்கொண்டு வரவேண்டும் என்று தெரிந்து கொண்டால் எல்லாருமே அழகிகள் தான் என்பது நிகழ்ச்சியின் மெசேஜ். இதனை அஞ்சலி தொகுத்து வழங்குகிறார். வாரம்தோறும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment