எனக்கு அந்த படத்திற்கு பிறகு இந்தப்படம் தான் மிகவும் பிடித்திருந்தது : கீர்த்தி சுரேஷ் பேச்சு

நடிகர் சங்க தலைவர் விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சண்டக்கோழி 2. இப்படம் விஷாலின் 25வது படமாக வெளிவரவுள்ளது. இப்படத்தை முதல் பக்கத்தை எடுத்த n.லிங்குசாமி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், எனக்கு இந்த படத்தில் கொடுத்த கேரக்ட்டர் மிகவும் பிடித்திருந்தது எனவும், நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு எனக்கு மிகவம் பிடித்த கேரக்ட்டர் எனவும் கூறினார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தளபதியின் சர்கார் படமும் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment