உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அனுமதி!

உடல் நலக்குறைவால் , அமெரிக்க முன்னாள் அதிபர் George H.W. Bush,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதாகும் George Bush-க்கு ரத்தத்தில் பரவிய தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, Houston நகரில் உள்ள Methodist மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்கு பின் George Bush-ன் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் George Bush-ன் மனைவி Barbara Bush காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்று திரும்பிய நிலையில் Bush-க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் 41வது அதிபராக George H.W. Bush பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment