Categories: Uncategory

உடல் எடையை குறைக்கும் பைனாப்பிள் ஜிஞ்சர் !!

பழவகைகளில் நல்ல சுவை உடையதும் மிகுந்த மருத்துவ குணமுடைய பழமாகவும் அன்னாச்சி பழம் இருக்கிறது.ஆங்கிலத்தில் பைனாப்பிள் என்று கூறுவர்.பைனாப்பிள் ஜிஞ்சர் ஸ்மூத்தி நமது உடலின் எடை குறைப்பிற்கு உதவுவது.எடையை குறைக்க இது உதவும் என ஏன் அடித்து சொல்கிறோம் என்றால் பைனாப்பிள் ஜிஞ்சர் ஸ்மூத்தியில் உள்ள பொருட்கள் குறைந்த அளவு கலோரியை கொண்டுள்ளன. ஆனால் நியூட்ரியண்ட்ஸ் அதிக அளவு நிறைந்துள்ளது. எனவே தான் இது உங்கள் உடலின் எனர்ஜியை அதிக நேரம் தக்க வைக்கிறது.

உடல் எடை குறைப்பு

இதில் உங்கள் உடல் மற்றும் சுவைக்கு தேவையான அனைத்தும் அடங்கியுள்ளது. இந்த ஸ்மூத்தியை உங்களின் தினசரி உணவுடன் எடுத்துக்கொள்ளலாம் அல்லது மாலை நேர ஸ்னாக்ஸ்சாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது வாரத்தில் ஒருநாள் காலை உணவிற்கு பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம் என பலவிதங்களில் உதவும்.இதில் அதிக அளவு நியூட்ரியண்ட்ஸ் இருந்தாலும், நமது உடலுக்கு பல தரப்பட்ட சத்துக்கள் தேவை எனவே இந்த ஸ்மூத்தியை தினசரி உணவுடன் கூடுதலாக எடுத்துக் கொள்ளவும்.

அன்னாச்சி(பைனாப்பிள்) சிறப்புகள்

நமது ஸ்மூத்தியில் உள்ள முதன்மை பொருளான பைனாப்பிளில் வைட்டமின் சி மற்றும் ஃபைபர் நிறைந்துள்ளது அதே நேரம் கலோரி மிக குறைந்த அளவே உள்ளது. ஃபிரஷ் பைனாப்பிள்  உங்களின் காலை உணவுடன் உண்ண ஆரோக்கியமான கூடுதல் உணவு. மேலும் இது மதிய உணவிற்கு பிறகு உண்ண தகுந்த சரியான பிற்பகல் சிற்றுண்டி. எடை குறைப்பிற்கு பைனாப்பிள் ஏற்றது ஏனெனில் இது கொழுப்பு இல்லாத மற்றும் கலோரி குறைந்த சிறந்த பழம்.

பைனாப்பிள் பழம் தண்ணீர் சத்து அதிகம் கொண்ட பழங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த பழம் அதன் நிகர எடையில் 87 சதவீதம் தண்ணீரை கொண்டுள்ளது. எனவே இது வெப்பமான நாட்களில் உங்களுக்கு தேவையான நீர்சத்தை உங்கள் உடலுக்கு அளிக்கிறது.

இறுதியாக, பைனாப்பிளில் உள்ள புரோமெலைன் என்று அழைக்கப்படும் என்சைம் உங்கள் செரிமானத்திற்கு நல்லது. நல்ல செரிமானம் இருப்பதால் உங்கள் உடலில் வீணாக நச்சுத்தன்மை உருவாக்கப்படுவதை தடுக்கிறது, இதன் மூலம் உடல் வீக்கம் மற்றும் கூடுதல் எடை ஆகியவற்றை தடுக்கலாம்.

இஞ்சியினால் உடலுக்கு  நன்மைகள்

இஞ்சி உண்மையில் ஒரு தெர்மோஜெனிக் மூலப்பொருள் ஆகும். அதாவது இது உங்கள் உடலின் வெப்பநிலையை மேம்படுத்தி உங்கள் வளர்சிதை (மெட்டபாலிசம்) வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது, இதனால் அதிக அளவு கொழுப்பு எரிக்கப்படுகிறது.இஞ்சி ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளலைக் குறைக்கும். இது இயற்கையாக பசியை தூண்டக்கூடியது. அதனால் தான் இஞ்சி பாதுகாப்பான மற்றும் பக்க விளைவுகள் இல்லாத பொருளாக இருக்கிறது.

கார்டிசோல் என்பது ஸ்டீராய்டு ஹார்மோன், நமது உடலின் ஆற்றல் கட்டுப்பாடு மற்றும் உடல் பாகங்களுக்கு அளிப்பது. சுருக்கமாக கூறினால், அதிக அளவு கார்டிசோல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும், தேவையற்ற வயிற்று கொழுப்பை நமது உடலில் சேர்த்து எடை அதிகரிக்க வைத்துவிடும். இஞ்சி சாப்பிடுவதால் உடல் பருமனுக்கு முக்கிய காரணமான கொழுப்பை குறைக்கிறது.

 

Dinasuvadu desk

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

3 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

3 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

3 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

4 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

4 hours ago