இன்று  கோலாகலமாக ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டி ஆரம்பம்…!

இன்று  ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டி ஆரம்பமாகவுள்ளது.21 ஆவது காமன்வெல்த் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இப் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இப் போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4500 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

இப்போட்டியில் நடைபெறவுள்ள 18 விளையாட்டுக்களும் 273 பிரிவுகளில் நடைபெறவுள்ளது. மேலும் இப் போட்டியில் இந்தியாவில் இருந்து 225 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். மேலும் இப்போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment