இந்தோனேசியா சுனாமியின் கொடூரம் …..உயிரிழப்பு எண்ணிக்கை429 ஆக அதிகரிப்பு…!!

இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட கொடூர சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் எரிமலை கடந்த டிசம்பர் 22-ம் தேதியன்று வெடித்து சிதறியது. இந்த எரிமலை வெடிப்பின் அதிர்வினால் சுந்தா ஜலசந்தி கடல் பகுதியில் 65 அடி உயரத்தில் சுனாமி உருவாகி தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவினை கடுமையாக தாக்கியது.இந்த  ஆழிபேரலையால் பல வீடுகளும், கடைகளும் சின்னாபின்னமாகின.பல மக்கள் சுனாமியில் சிக்கி பலத்த காயமடைந்தனர். சிலர் சுனாமி தாக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் மீட்பு பணியை தொடங்கிய நிலையில் ஏராளமான இறந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றது.ஒவ்வொரு கட்டமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருவது சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றது.இந்நிலையில் தற்போது வரை கொடூர சுனாமி தாக்குதலுக்கு 429 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 128 பேரை காணவில்லை எனவும் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் தெரிவித்துளது மேலும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.எரிமலை தொடர்ந்து வெடித்த நிலையில் இருப்பதால் அங்குள்ள மக்கள் மீண்டும் எரிமலை வெடிக்குமோ என்ற அச்சத்திழலும் ,  பீதியிலும் இருந்து வருகின்றனர். மக்கள் அனைவரும் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment