இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த இங்கிலாந்து அணி …!ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி !

இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டமும் மழையால் தாமதமாக தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதை தொடர்ந்து தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 29,விராட் 23 ரன்கள் அடித்தனர்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் அன்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. குக்(21), ஜென்னிங்ஸ்(11), ரூட்(19), போப்(28), பட்லர் (24) என சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பெர்ஸ்டோவ், வோக்ஸ் ஜோடி மட்டும் நிலைத்து நின்று ஆடியதோடு, சீரான வேகத்தில் ரன்களையும் குவித்தது. இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

அதனால், அதிகபட்சம் 200 ரன்களை எட்டும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. பெர்ஸ்டோவ், வோக்ஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. பெர்ஸ்டோவ் 76 பந்துகளிலும், வோக்ஸ் 71 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரும் ஒரு ஓவருக்கு ஒரு பவுண்டரி என்ற கணக்கில் இந்திய பந்து வீச்சுகளை சிதறடித்தனர். இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் அவ்வளவும் எளிதில் முறியடிக்கவில்லை.
இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெர்ஸ்டோவ் 93 ரன்னில் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 81 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இந்திய அணி 107 ரன்னில் சுருண்ட நிலையில், இங்கிலாந்து 250 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Comment