அயோத்தி வழக்கு ஜனவரிக்கு ஒத்தி வைப்பு..!!

அயோத்தி பிரதான வழக்கை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து13-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.இந்த வழக்கை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் அமர்வு விசாரித்து வந்தது. தீபக் மிஸ்ரா அண்மையில் ஓய்வு பெற்றார்.இதைத் தொடர்ந்து தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் இடம்பெற்றுள்ளனர். புதிய அமர்வு முன்பு அயோத்தி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கு விசாரணை வரும் 2019 ஜனவரியில் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment