அம்மா ஸ்கூட்டர் வாங்குவது எப்படி ?இதோ முழுவிவரம் …..

தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகளின் தகுதி மற்றும் முழு விவரம் இதில் உள்ளது.
கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125 சி.சி. எந்திரத் திறன் கொண்ட புதிய இருசக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் 25,000 ரூபாய் தொகை பயனாளிக்கு மானியமாக அரசால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் முறைசாரா பணியிலுள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பெண்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் இன்று முதல் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. அதே நேரத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள்ளாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகளின் தகுதி 
1. நிறுவனப்பணி மற்றும் முறைசாரா பணியில் உள்ள பெண்கள்
2. சொந்த கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள்
3. அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் பணிபுரியும் பெண்கள்
4. பெண் வங்கி வழி நடத்துனர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்
வயது வரம்பு & வருமான தகுதி
1. தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
2. ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்கும் பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
யாரெல்லாம் பெறலாம்?
1. ஆதரவற்ற பெண்கள்
2. இளம் விதவைகள்
3. மாற்றுத்திறனாளி மகளிர்
4. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர்
5. திருநங்கைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது
இருசக்கர வாகனத்தை பெறுவதற்கான தகுதி சான்றிதழ்கள்
1. பிறந்த தேதிக்கான சான்றிதழ்
2. இருசக்கர வாகன உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டையின் நகல்
3. 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்
4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
5. சிறப்பு தகுதி பெற விரும்புவோர் அதற்கான சான்றிதழ்
6. சாதிச் சான்றிதழ்
7. இருசக்கர வாகத்தின் கொட்டேசன்
மனுக்கள் வழங்கப்படும் இடங்கள் 
1. ஊராட்சி ஒன்றியங்கள்,  பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
2. பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …..

Leave a Comment