சவுதி அரேபியாவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அடுத்த மாற்றத்திற்கு தயாராகின்றது சவுதி நாடு.

கடந்த ஆண்டு சவுதியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய 32 வயது பட்டத்து இளவரசரான பின் சல்மான், இஸ்லாமிய கொள்கைகளில் மிதமான போக்கை கையாள விரும்புவதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பெயரை குறிப்பிட விரும்பாமல் பேட்டி அளித்துள்ள சவுதி அரேபிய இளைஞர்கள் சிலர், சீர்திருத்தங்கள் வரவேற்கத் தக்கவை எனினும் ஆடம்பர அரசு நிகழ்ச்சிகளை தவிர்த்து இளைஞர்களின் வேலை வாய்ப்புகளுக்கு பணத்தை செலவிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்..

சமீபத்தில் தான் அங்கு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும் ,திரையரங்கங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ..

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here