பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.! பதற்றத்தில் டெல்லி.!

தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு பெண் காவலர் ஒருவரை சில மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 முதல் நடைபெற்று வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி மொத்தமுள்ள உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மேலும் பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. டெல்லியில் தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,46,92,136 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் போலீஸ் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக ப்ரீத்தி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவிட்டு வீட்டுக்கு இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர் ஒருவர் ப்ரீத்தியின் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதில் ப்ரீத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் ரோஹினி பகுதியில் உள்ள ப்ரீத்தியின் சடலத்தை மீட்டனர். அதில் ப்ரீத்தியை மர்ம நபர் 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளது என்று தெரிய வந்தது.

இதனிடையே ப்ரீத்தி 2018-ம் ஆண்டு உதவி ஆய்வாளர் சேர்ந்தார். இவர் ஹரியானா மாநிலம் சோனேபட்டை சேர்ந்தவர். அவரது காவலர் வேலைக்காக ரோஹினி பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார் என குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் இடத்தில இருந்து சிசிடிவி கேமராக்களை சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பெண் காவலர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நாட்டுத் துப்பாக்கிகள் சுலபமாக கிடைப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்று டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்