மீண்டும் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? முதலமைச்சர்  பழனிசாமி ஆலோசனை

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர்  பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது.ஆனாலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு  ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கும் நாளையுடன் நிறைவடைகிறது.

 இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர்  பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மீண்டும் நீட்டிக்கப்படுமா ?  என்பது ஆலோசனைக்கு பின்னர் தான் தெரியும்.