பொறுப்பற்ற செயல்களால் ஏற்படும் பேரிழப்புகளை நியாயப்படுத்துகிறோம்! ஜி.வி.பிரகாஷ் காட்டமான பதிவு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையின் உடலை மீட்க நான்கு நாட்களாக போராடிய நிலையில், இவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
இன்று அதிகாலையில், குலாண்டகியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. குழந்தையின் உயிரிழப்புக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் காட்டமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் பேரிழப்புகளை நியாயப்படுத்துகிறோம். தப்பித்துக் கொள்கிறோம். உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட பொற்கால அடிப்படையில் அரசும் தனி மனிதர்களும் முயற்சிக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.