பாலிவுட்டில் தயாராகும் போக்கிரி-2! தமிழிலும் பிரபுதேவா இயக்குவாரா?!

தமிழில் தளபதி விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கி அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம்

By manikandan | Published: Oct 12, 2019 07:15 AM

தமிழில் தளபதி விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கி அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம் போக்கிரி. விஜயின் திரை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்த படம் தெலுங்கில் மகேஸ்பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. ஹிந்தியில் சல்மான்கான் நடிக்க பிரபுதேவாவே அப்படத்தை இயக்கினார். அங்கும் வான்டட் எனும் பெயரில் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட்டானது. பிரபு தேவா தற்போது ஹிந்தியில் சல்மான் கானை வைத்து தாபங் 3 படத்தை இயக்கி முடித்துவிட்டார். இப்படம் டிசம்பர் 20இல் வெளியாக உள்ளது. அடுத்து மீண்டும் ஒரு ஹிந்தி படத்தை சல்மான் கானை வைத்து பிரபு தேவா இயக்க  உள்ளார். ' இந்த படம் வாண்ட்டட் படத்தின் 2ஆம் பாகம் என கூறப்படுகிறது. இப்படம் தி அவுட்லாஸ் எனும் கொரிய படத்தின் தழுவல் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc