விசுவாசம் படம் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் டி.இமான் என்ன கூறியுள்ளார் தெரியுமா…?

தளபதி விஜய் அவர்களின் சர்க்கார் திருவிழா தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தல அஜித் அவர்களின் விசுவாசம் படம் புதுவருடத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் நேற்று நயன்தாராவின் பிறந்தநாளில் ஸ்பெஷலாக ஏதாவது அப்டேட் வெளில்யிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், டி.இமான் அவர்கள் விசுவாசம் படம் பற்றி பேசியுள்ளார். அஜித் அவர்களின் படத்தில் பணிபுரிவது பெரியா வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கன்னட ஸ்டார் புனித் ராஜ்குமார் படத்திற்கு இசையமைப்பதாகவும் கூறியுள்ளார். இரண்டு படத்தின் இசையமைப்பு வேலைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment