“தளபதி 63” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல நடிகர் !!!!வைரலாகும் வீடியோ !!!!

  • சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி நடிகர்  கதிர் “தளபதி  63” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும்.
  • இப்படம் வருகின்ற தீபாவளி-க்கு ரிலீஸ் என கூறினார்.  

நடிகர் கதிர் கடந்த 2013 ஆம் ஆண்டில் விக்ரம் சுகுமாறன் இயக்கிய “மதயானை கூட்டம்” என்ற திரைப்படத்தின் மூலம்  மூலம் அறிமுகமானார்.அதன் பின் 2015 -ம்  ஆண்டு வெளியான “கிருமி” திரைப்படமும்  இவருக்கு மிக பெரிய  பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

அதன்  பிறகு நடிகர் கதிர் சமீபத்தில் வெளி வந்த “பரியேறும் பெருமாள்” படத்தில்  நடித்து உள்ளார். இந்த படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.இப்படம் பல விருதுகளை குவித்தது.இந்நிலையில் தற்போது நடிகர் கதிர்  நடித்து வரும் “சத்ரு” சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியானது.

இந்நிலையில் நடிகர் விஜய் “சர்கார்” படத்தை அடுத்து தற்போது “தளபதி  63” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா  நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி நடிகர்  கதிர் “தளபதி  63” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் ,மேலும் இப்படம் வருகின்ற தீபாவளி-க்கு ரிலீஸ் என கூறினார்.இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சில் உள்ளனர்.மேலும் இந்த வீடியோ சமூக வளை தளத்தில் வைரலாகிறது.

author avatar
murugan

Leave a Comment