வரலாற்றில் இன்று (டிசம்பர் 16) வெற்றி நாள்(இந்தியா ).!

  • 1971ல் இந்தியா வங்கதேச வீர்ரகளுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர் 1971 -ல் பெற்ற வெற்றி பெற்றது.
  • அதன் நினைவாக ஆண்டு தோறும்  டிசம்பர் 16 அன்று வெற்றி நாளாக
    கொண்டாடப்படுகிறது.

1971-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து சரணடைந்தனர்.இதனால் கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பிறகு டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர்.

இப்போரில்  உயிர் இழந்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வருடந்தோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் அன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியவாயிலில் (India Gate) உள்ள அமர் ஜவான் ஜோதியில் முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துகின்றார்.

அதேபோல் பெங்களூரில் உள்ள தேசிய இராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் டிசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்றனர்.

author avatar
murugan