52-48,53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் பதவியை தக்க வைத்துக்கொண்ட அமெரிக்க அதிபர்.!

  • அமெரிக்காவின் டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது.
  • 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவியை தக்க வைத்துக்கொண்டார்.

அமெரிக்காவின் 45-வது அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளில் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ள ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் பிடன் மீது ஊழல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடுமாறு உக்ரைன் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக கூறி கடந்த டிசம்பர் மாதம் இந்த பதவி நீக்க விசாரணையை ஜனநாயக கட்சி முன்வைத்தது.

இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், பதவி நீக்க நடவடிக்கைக்கு உட்பட்டு அதன் பிறகு மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்காவின் முதல் அதிபராக டொனால்டு டிரம்ப் உருவெடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது சாட்டப்பட்ட இரண்டில் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அவர் தனது பதவியை இழந்திருப்பார். ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அமெரிக்காவின் அதிபராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பதவியேற்றிருப்பார். ஏற்கனவே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்