தாஜ்மஹாலை மனைவியுடன் பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலனியாவுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டு

By Fahad | Published: Mar 29 2020 03:47 AM

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலனியாவுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை  பிரதமர் மோடி  வரவேற்றார்.விமான நிலையத்தில்  டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையெடுத்து ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு பார்வையிட்டார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைப்பெற்ற “நமஸ்தே டிரம்ப்”  நிகழ்ச்சியில் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். பின்னர் டிரம்ப் அங்கிருந்து புறப்பட்டு தனது தனி விமானம் மூலம் ஆக்ரா வந்ததடைந்தார். ஆக்ரா விமானநிலையத்தில்  உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ,ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர்.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக்ராவின் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள  தாஜ்மகால் வந்தடைந்தார் .தனது மனைவி மெலனியா உடன், காதலின் சின்னம் தாஜ்மகாலை பார்வையிடுகிறார் ட்ரம்ப்.அங்கு உள்ள வருகை பதிவேட்டில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.மேலும் அவரது மனைவியுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.