சுவையான கேரட் வடை செய்வது எப்படி?

சுவையான கேரட் வடை செய்வது எப்படி?

Default Image

சுவையான கேரட் வடை செய்யும் வடை. 

நாம் நம்முடைய குழந்தைகளுக்கு, நமது கையினாலேயே உணவுகளை செய்து கொடுப்பது மிகவும் நல்லது. அவ்வாறு, செய்து கொடுக்கும் போது சத்தான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான கேரட் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

 • துருவிய கேரட் – ஒரு கப்
 • கடலை மாவு – 2 டீஸ்பூன்
 • மைதா மாவு – ஒரு ஸ்பூன்
 • கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
 • இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
 • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
 • பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று
 • பொடியாக நறுக்கிய புதினா – அரை கப்
 • பொடியாக நறுக்கிய கருவேப்பிலை – கால் கப்
 • உப்பு – தேவைக்கேற்ப
 • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், எண்ணெயஜி மற்ற அணைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடைகளாக தட்டி போட வேண்டும். வடையை இருப்பக்கமும் மாற்றி போட்டு வெந்ததும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான கேரட் வடை தயார்.

Join our channel google news Youtube